அடுக்ககத்தின்
ஐந்தாம் தளத்தில்
குடியிருப்பவனின்
சன்னலோரம் அசையும்
தொட்டிச்செடியை
ரசிக்கும் விழிகளுக்கும்;
வேப்பிலைகள் நிறையும்
அறையெண் குறிப்பிடப்பட்ட
அஞ்சல் பெட்டியைக்
கடந்து
மின்னஞ்சல்களைத்
துலாவிப் பழகிய
விரலேறிய மூளைக்கும்;
விபத்துப் பரப்பொன்றில்
மரணத்திற்கும்
வாழ்விற்கும் இடையே
துடித்துக் கொண்டிருப்பவனை
அத்தனை லாவகமாய்க்
கடந்து
அலுவலகம் ஏகும்
இதயங்களுக்கும்;
யாராவது அனுப்பி
வைப்போம்
பார்சலில் கொஞ்சம்
கிராமத்து மண்ணை.
அதைப் பிரிக்கும்
போதாவது
மண் சொந்தமற்ற
அடுக்ககத்தில்
வாழ்பவனுக்குள்
நிறையட்டும்
பண்பாட்டை உலகிற்கேத்
தந்த
தன் கிராமத்து
மண்வாசம்!
-வைகறை,
புதுக்கோட்டை.
ஒப்புதல்:-
@ "மண்ணற்றவனின் மண்வாசம்" எனும் இக்கவிதை "வலைப்பதிவர் சந்திப்பு 2015" நடத்தும் மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது.
@ பிரிவு: 4.புதுக்கவிதை (முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்து)
@ இக்கவிதை எனது
சொந்த கற்பனையே!
@ இக்கவிதையை வேறு
எந்த இதழிலோ, மின்னிதழ்களிலோ, பிற ஊடகங்களிலோ வெளியிடவில்லை என உறுதியளிக்கிறேன்.
இது கவிதை!!!!!
ReplyDeleteஇது தான் இந்த தலைப்புக்கு நான் உணர்ந்த கவிதை!!
வாழ்த்துகள் அண்ணா!
புதுக்கவிதையும் போட்டிக்குவந்தாச்சு..........அப்பநாந்தான்ஒன்னுமெழுதலையா....................?
ReplyDeleteமண்மணம் ஊட்ட முயலும் கவிதை. வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகான அருமையான சிந்திக்க வைக்கும் வரிகள்வரிகள் வாழ்த்துக்கள்! நன்றி நண்பரே
ReplyDeleteபடைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...
ReplyDeleteஇணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html←
நன்றி...
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com