( “வலைப்பதிவர்
சந்திப்பு -2015” மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது. பிரிவு: மரபுக்கவிதை )
@
பட்டனைத் தட்டி
விட்டால்
விபரங்கள் கொட்டு மென்று
சட்டெனப் புரிந்து
கொள்ளும்
சந்ததியில் நீ பி றந்தாய்!
பட்டனே இல்லா சட்டை
பறப்பதும்
இங்கு தானே,
சட்டையே சிலருக்
கில்லை
என்பதை ஏன் ம றந்தாய்?
@
உலகமே கைக்குள்
வந்தால்
உலகையே வென்ற தாக
பலவாறு எண்ணு கின்றாய்;
பாசாங்கு பண்ணு கின்றாய்!
நிலைக்கதவைத் தாண்டிச்
சென்றால்
நிற்கின்ற அடுத்த வீட்டின்
நிலையென்ன தெரியு
மா?நில்!
நின்வெற்றி புரியு தா?சொல்!
@
பணத்தையே சேர்ப்ப
தைத்தான்
வெற்றியென நீ நி னைத்தாய்
பிணத்தையே தூக்கிக்
கொண்டு
தினந்தினம் ஓடு கின்றாய்.
கணநேரம் நின்று கேட்பாய்,
கானல்நீர் வெற்றி யில்லை;
பணம்தாண்டி உறவைச்
சேர்ப்போன்
ஆனால்நீ தோற்ப தில்லை!
-வைகறை,
புதுக்கோட்டை.
பா வகை: அறுசீர்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
ஒப்புதல்:-
@ இக்கவிதை எனது
சொந்த கற்பனையே!
@ இக்கவிதையை வேறு
எந்த இதழிலோ, மின்னிதழ்களிலோ, பிற ஊடகங்களிலோ வெளியிடவில்லை என உறுதியளிக்கிறேன்.
அருமை
ReplyDeleteஅருமை
வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி அய்யா!
Deleteபணத்தையே சேர்ப்ப தைத்தான்
ReplyDeleteவெற்றியென நீ நி னைத்தாய்
பிணத்தையே தூக்கிக் கொண்டு
தினந்தினம் ஓடு கின்றாய்.// இன்றைய வாழ்வியலின் போலியைச் சுட்டும் அருமையான வரிகள். வாகை சூட வாழ்த்துகள்.
நன்றி நண்பரே!
Deleteஅண்ணா!
ReplyDeleteசத்தியமா உங்ககிட்ட மரபுக்கவிதை முதலில் வரும் என எதிர்பார்க்கவில்லை நான்!! என் பிழை தான்:)) கலக்கிடீங்க!! வாழ்த்துக்கள்!!
ஆஹா இதென்ன மரபுல அசத்தல்...சூப்பர் வாழ்த்துகள்..
ReplyDeleteசட்டையே பலருக் கில்லை.... சமூகக் கண்ணோட்டம் விருத்தத்தில் அழகு.
ReplyDeleteவைகரைசகோவைமரபிலும்பார்க்கலாமா?வெற்றிபெறவாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteஅருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ..!
ReplyDelete