Showing posts with label கணையாழி. Show all posts
Showing posts with label கணையாழி. Show all posts
Tuesday, October 7, 2014
உலகம்
ஒவ்வொரு வீடாய்த்
தேடிக் கொண்டிருக்கிறது
அந்தக் குருவி
தான் கூடு கட்டியிருந்த
மரத்தை.
மேசையாய்;
நாற்காலியாய்;
கட்டிலாய்;
ஏதோவொரு வீட்டில்
ஒடுங்கிப் போயிருக்கலாம்
அதன் உலகம்.
யார் கண்டது?
விரட்டியடிக்கும்
யாரோவொருவர்
இழுத்தடைக்கும்
சாளரக் கதவாகக்
கூட
இருக்கலாம் அதன்
உலகம்.
அப்படி யென்றால்
நீங்களும் கேட்கலாம்
சாளரத்தின் விசும்பலோசையை
மரங்களின் பாசை
தெரிந்திருந்தால்.
( ஏப்ரல்-2013 கணையாழி )
Subscribe to:
Posts (Atom)


