Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts
Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts

Monday, November 9, 2015

வெற்றுப் பாத்திரம்


¤
முதல் மிடறு அருந்திய
தனிமை மூதாட்டி தாமதிக்கிறாள்
அடுத்த மிடறுக்கு!

¤
மரணவீடு,
சடலம் எடுத்தபின்
அத்தனை அமைதி!


¤
தரை துடைக்கும்
துடைப்பத்தின் நுனியில் 

இப்போது ஒரு தேவாலயம்!

¤
அமாவாசை இரவு,
யாருக்கும் தெரியப் போவதில்லை
வெறுமையான என் பாத்திரம்!


-வைறை 

Tuesday, October 7, 2014

குட்டிமீன்


@
குட்டி மீன்
கடித்துப் போகிறது
தூண்டில்காரன் கால்களை!

@
சர்க்கஸ் சிங்கம்
வெறித்துப் பார்க்கிறது
கூண்டிற்குள் அசையும் செடியை!

@
மனிதன் நெருங்குகையில்
பறந்துவிடும் பறவைகள்
பாவம் மரங்கள்!

@
புறப்படும் நேரம்
எழுதி விட்டு வருகிறேன்
ஒரு கவிதையின் முதல்வரியை!

@
அசையும் மரத்துண்டில்
கடக்கிறது நத்தை
ஒரு பூகம்பத்தை!

@
கோடை மதியம்,
குவளையை நெருங்கும்
எறும்பும் என் தாகமும்!

@
இலையுதிர் மதியம்,
திடீர்மழையில் சருகு
கூச்சலிட்டடங்கும்!

@
ஆடிக் காற்று,
கிழிந்த காகிதம் பறக்கிறது
வண்ணத்துப்பூச்சியுடன்!

@
வேறொன்றுமில்லை,
என் கையில்
உன் கைக்குட்டை!

@
மூங்கில் காடு,
ஏதோவொரு குருவி
பதில் பாட்டிசைக்கிறது!

@
உலுக்காதே
உதிர்வதில்லை
வண்னத்துப்பூச்சிகள்!

அழிக்கத் தொடங்கும் மழை!

@
ஆழக் கிணறு,
தூண்டிலுடைக்கும் கல்லை
முத்தமிடும் மீன்கள்!


@
திடீர்மழை,
குடைபிடிக்க மறுக்கிறான்
சாலை ஓவியன்!


@
படிக்கத் தெரியாத என் தாத்தா
இதோ...
படிக்கப்படுகிறார்!


@
மழையை எழுதப்
பேனா எடுத்தவனை

அழிக்கத் தொடங்கும் மழை!
Related Posts Plugin for WordPress, Blogger...