Thursday, August 13, 2015

<<<< புத்தர் சிலை >>>>


அந்த புத்தர் சிலை
இப்போதுதான் உடைந்து போனது.

முன்பிருந்த இடத்திலிருந்து
பாதுகாப்பான இடத்திற்கு
மாற்றி வைத்த போதுதான்
நிகழ்ந்தது அந்த விபத்து.

100 ரூபாய் கூறிய
சாலையோர முதியவரிடம்
அரைமணி நேரம் பேசி
50 ரூபாய்க்கு வாங்கப்பட்ட புத்தரது.

புத்தரின் புன்னகையை வர்ணித்தவாறே
கையிலெடுத்த நண்பனிடமிருந்து
பறித்து தான் அது பாதுகாக்கப்பட்டிருந்தது.

அன்று
கொரியர் கொண்டு வந்தவன்
ஆசையாய் பார்த்த போதே
அவனுக்குள் அலையடித்த
புத்தனைக் கையிலெடுத்துப் பார்க்கும் ஆசை
என் பார்வைகளாலேயே
மறுதலிக்கப்பட்டிருந்தது.

அந்த புத்தர் சிலைதான்
இப்போது உடைந்து கிடக்கிறது.

இப்போது
யோசித்தபடியே நிற்கிறேன் நான்,

உடைந்த புத்தரை
எதிர்கொள்வதைப் பற்றியல்ல;

என் கவலையெல்லாம்
இத்தனை நண்பர்களை இனி
எப்படி எதிர்கொள்வது என்பதுதான்.
-வைகறை.
(கொலுசு இணைய இதழில் வெளியாகியிருக்கும் எனது கவிதை)

10 comments:

  1. உடைந்த புத்தனின் மிச்ச இதழிகளில் ஏதேனும் எள்ளல் தென்பட்டதா சகா:)
    உள்ளிருக்கும் புத்தர்களை உடைத்துக்கொண்டிருக்கிறது இந்த கவிதை!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மைதிலி மேடம்!

      Delete
  2. அருமையாக இருக்கிறது அய்யா

    ReplyDelete
  3. மிகவும் இரசித்தேன் கவிஞரே......

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வும், நன்றியும் அய்யா!

      Delete
  4. புத்தனும் புத்தமும் உடைந்து வெகுநாள் ஆயிற்றே தம்பி. உடைந்த புத்தன் இப்போது உங்களுக்குள் உருப்பெற்றிருப்பான்.
    அருமையான கவிதை.

    ReplyDelete

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...