Monday, September 21, 2015

கானல் நீர் வெற்றியில்லை

( “வலைப்பதிவர் சந்திப்பு -2015” மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது. பிரிவு: மரபுக்கவிதை )

@
பட்டனைத் தட்டி விட்டால்
     விபரங்கள் கொட்டு மென்று
சட்டெனப் புரிந்து கொள்ளும்
     சந்ததியில் நீ பி றந்தாய்!
பட்டனே இல்லா சட்டை
பறப்பதும் இங்கு தானே,
சட்டையே சிலருக் கில்லை
     என்பதை ஏன் ம றந்தாய்?

@
உலகமே கைக்குள் வந்தால்
     உலகையே வென்ற தாக
பலவாறு எண்ணு கின்றாய்;
     பாசாங்கு பண்ணு கின்றாய்!
நிலைக்கதவைத் தாண்டிச் சென்றால்
     நிற்கின்ற அடுத்த வீட்டின்
நிலையென்ன தெரியு மா?நில்!
     நின்வெற்றி புரியு தா?சொல்!

@
பணத்தையே சேர்ப்ப தைத்தான்
     வெற்றியென நீ நி னைத்தாய்
பிணத்தையே தூக்கிக் கொண்டு
     தினந்தினம் ஓடு கின்றாய்.
கணநேரம் நின்று கேட்பாய்,
     கானல்நீர் வெற்றி யில்லை;
பணம்தாண்டி உறவைச் சேர்ப்போன்
     ஆனால்நீ தோற்ப தில்லை!
-வைகறை,
புதுக்கோட்டை.

பா வகை: அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

ஒப்புதல்:-
@ இக்கவிதை எனது சொந்த கற்பனையே!

@ இக்கவிதையை வேறு எந்த இதழிலோ, மின்னிதழ்களிலோ, பிற ஊடகங்களிலோ வெளியிடவில்லை என உறுதியளிக்கிறேன்.

10 comments:

  1. அருமை
    அருமை
    வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. பணத்தையே சேர்ப்ப தைத்தான்
    வெற்றியென நீ நி னைத்தாய்
    பிணத்தையே தூக்கிக் கொண்டு
    தினந்தினம் ஓடு கின்றாய்.// இன்றைய வாழ்வியலின் போலியைச் சுட்டும் அருமையான வரிகள். வாகை சூட வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அண்ணா!
    சத்தியமா உங்ககிட்ட மரபுக்கவிதை முதலில் வரும் என எதிர்பார்க்கவில்லை நான்!! என் பிழை தான்:)) கலக்கிடீங்க!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. ஆஹா இதென்ன மரபுல அசத்தல்...சூப்பர் வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. சட்டையே பலருக் கில்லை.... சமூகக் கண்ணோட்டம் விருத்தத்தில் அழகு.

    ReplyDelete
  6. வைகரைசகோவைமரபிலும்பார்க்கலாமா?வெற்றிபெறவாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அருமை வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  8. அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...